கனமழையால் செல்போன் சேவை பாதிக்குமா? அதிகாரிகள் அவசர ஆலோசனை
கடந்த 2015ஆம் ஆண்டு கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டதால் சென்னை நகரமே இருளில் மூழ்கியது மட்டுமின்றி செல்போன் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிலைமை இந்த ஆண்டு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு அதிகாரிகளும், தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகளும் விழிப்புடன் இருந்து வருகின்றனர்.
சற்று முன்னர் தற்போதைய மழையில், செல்போன் சேவை பாதிக்காமல் இருக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் செல்போன் சேவை பாதிக்காவண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அலசியதாக தெரிகிறது.