அடையாற்றில் உயர்ந்து வரும் நீரின் மட்டம்: கரையோர பகுதி மக்கள் அச்சம்
சென்னையில் உள்ள அடையாற்றில் கனமழை காரணமாக நீரின் மட்டம் அதிகரித்து வருவதால் அடையாற்றின் கரையோர மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.எந்த நேரமும் ஆற்றின் நீர் வீட்டுக்குள் புகுந்துவிடும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளம் வந்த போது சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று சைதாப்பேட்டை ஆடுதொட்டி பாலம் அருகே உள்ள பகுதி. இந்த பகுதியில் தற்போது நீர்மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக அப்பகுதியினர் அச்சத்துடனே இருக்கின்றனர்.
ஆனால் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து எந்த தகவலும் அரசிடம் இருந்து வரவில்லை என்றும் மீண்டும் ஒரு 2015 நிலைமை தங்களுக்கு வராமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்