1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Suriya advices students regarding NEET Exam

உயிரை விட ஒரு பரீட்சை பெரிதல்ல - சூர்யா!

உயிரை விட ஒரு பரீட்சை பெரிதல்ல
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார். 
 
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் 4 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டர். இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நீட் விலக்கு மசோதாவை சப்பேரவையில் தாக்கல் செய்தார். 
 
இதனிடையே நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ஒரு அண்ணனாக கேட்டுக்கொள்கிறேன். மாணவ, மாணவியர் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். 
 
உயிரை விட ஒரு பரீட்சை பெரிதள்ள. மனது கஷ்டமாக இருந்தால் நண்பர்கள், பெற்றோரிடம் மாணவர்கள் மனம் விட்டு பேச வேண்டும். பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாமே சிறிது நேரத்தில் மறைந்துவிடக்கூடியவை. 
 
தற்கொலை, வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பதெல்லாம் உங்களை விரும்புபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் பெரிய அளவு வெற்றி பெற முடியும் என குறிப்பிட்டுள்ளார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
யார் இந்த ஆர்.என். ரவி??