தொப்புள் கொடி விவகாரம்: வருத்தம் தெரிவித்த கடிதத்தை சமர்ப்பித்த இர்ஃபான்
தொப்புள் கொடி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த கடிதத்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் இர்பான் சமர்ப்பிப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவத்துறையிடம் விளக்கக் கடிதம் கொடுத்த யூடியூபர் இர்ஃபான், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என கூறியுள்ளார்.
மேலும் யூடியூபர் இர்ஃபான் தனது கடிதத்தில் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும்
வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைக்கு அபாராதம் மற்றும் 10 நாட்கள் புதிய நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்த நிலையில், இர்பான் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் கேட்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran