ஓபிஎஸ்-ஐ அழைத்து இன்னொரு பொதுக்குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஓபிஎஸ்ஐ வரவழைத்து இன்னொரு பொது குழு கூட்டி, அந்த பொதுக்குழு கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை தேர்வு செய்யலாம் என அதிமுக பொது குழு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
அதிமுக பொது குழு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் வாதாடி வருகின்றனர். இந்த வாதத்திற்கு பின்னர் ஓபிஎஸ் தரப்பினர் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என அதிமுக பொது குழு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் நீதிமன்றம் கூறும் யோசனையை ஏற்காவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படும் வேட்பாளரை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அந்த பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது .
Edited by Mahendran