திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (13:48 IST)

அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான காலம் நெருங்கிவிட்டது: சசிகலா

sasikala
ஒன்றிணைந்த அதிமுக தான் திமுகவுக்கு சவால் விடும் வகையில் இருக்கும் என்று பாஜக கூறி வருகிறது என்பதும் இதே கருத்தைதான் ஓபிஎஸ் சொல்லி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அதிமுக ஒன்றிணை வேண்டும் என்பதுதான் கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பம் என்றும் அதிமுக ஒரே அணியாக இருந்தால்தான் வெற்றி பெறும் என்றும் தனித்தனியாக போட்டியிட்டால் அதிமுகவுக்கு நல்லது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 
ஓபிஎஸ் அன்னை சந்திக்க இருப்பதாக கூறி இருப்பது நல்ல முயற்சி என்றும் அதிமுகவை ஒன்றிணைக்க கூடிய காலம் நெருங்கி விட்டது என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
நான் ஆரம்பம் முதலே அதிமுக ஒன்றிணை வேண்டும் என்று தான் சொல்லி வருகிறேன் என்றும் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுப்பேன் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran