உப்பூர் அனல் மின்நிலையத்திற்கான தடை நீக்கம்! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Thermal Power Station
Prasanth Karthick| Last Modified வியாழன், 1 ஜூலை 2021 (16:42 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல் மின்நிலையம் அமைக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதை நீக்கி இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின் உற்பத்தியை அதிகரிக்க தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் புதிய அனல் மின்நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுற்றுசூழல் அனுமதி பெற முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என அனல் மின்நிலையம் அமைக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் உப்பூரில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :