தொடர்புடைய செய்திகள்
- பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை தகவல்
- நாங்களும் இந்தியில மருத்துவம், பொறியியல் படிப்போம்! – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!
- பொறியியல் மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடங்கள் இருக்காது: அமைச்சர் பொன்முடி
- தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து: ஐகோர்ட் முக்கிய உத்தரவு!
- நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை!
பொறியியல் படிப்பு: துணை கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு!
பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு தேதியை உயர்கல்வித் துறை அமைச்சகம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புக்கான பொது பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 10ஆம் முதல் நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த நிலையில் இதுவரை பல நிரப்பப்படாத பொறியியல் இடங்களுக்கு அடுத்த கட்டமாக துணிஅ கலந்தாய்வு நடைபெற உள்ளது. நவம்பர் 9 முதல் 13 ஆம் தேதி வரை இந்த துணை கலந்தாய்வு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
ஆன்லைன் வாயிலாக இந்த துணை கலந்தாய்வு நடைபெறும் என்றும் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
