நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை!
நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க 2024 ஆம் ஆண்டு வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய பாடப் பிரிவுகளை மட்டும் தொடங்க அனுமதி அளித்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் தற்போது 443 கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு, நாடு முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரி குறித்து ஆய்வு செய்தது
இந்த ஆய்வுக்கு பின்னர் 2022ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தடை விதித்தது. இந்த நிலையில் இந்த தடையை 2024 ஆம் ஆண்டுவரை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எனவே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran