செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (19:22 IST)

காவிரி தீர்ப்பு: ஒருவழியா ரஜினியும் கருத்து சொல்லிட்டாரு

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்து வந்த காவிரி பிரச்சனைக்கு இன்று சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்கள் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிவிட்டனர்

இந்த நிலையில் ரஜினி ஒரு கன்னடர் என்றும் அவர் கர்நாடகாவில் போய் கட்சி ஆரம்பிக்கட்டும் என்று சீமான் போன்ற அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில், கர்நாடகத்திற்கு சாதகமாக வந்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு குறித்து ரஜினிகாந்த் என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டது

இந்த நிலையில் சற்றுமுன் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் இந்த தீர்ப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், 'காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.