புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 நவம்பர் 2018 (19:51 IST)

கஜா புயல்: ரூ.2 கோடி நிதி வழங்கிய சன் குழுமம்

கடந்த 10 - 12 நாட்களுக்கு முன்னர் தமிழக டெல்டா பகுதிகளை கஜா புயல் கடுமையாக தாக்கிய நிலையில், இன்னும் சீரமைப்பு பணிகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. 
 
கடந்த 15 ஆம் தேதி இரவு தமிழகத்தில் கஜா புயல் கரையை கடந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பாதிப்புகளை சீரமைக்க பலர் நிதி அளித்து வருகின்ரனர். இதில், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் ஆகியோர் அடக்கம். அந்த வகையில் இன்று சன் குழுமம் கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.2 கோடி நிதி அளித்தது. 
 
இந்த ரூ.2 கோடி நிவாரண நிதியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக சென்று சன் குழும நிர்வாகிகள் வழங்கினர். டெல்டா மாவட்டங்களின் பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில் ரூ. 200 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.