ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 26 மே 2018 (16:12 IST)

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு!

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் பேசிய 52 வினாடிகள் ஆடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் மரணம் தற்போது வரை மர்மமாக உள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா பெசிய 52 வினாடிகள் ஆடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
 
ஆறுமுகசாமி விசாரணையில் மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்த ஆடியோ பதிவை வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின் பேரில் அவரின் உதவியாளருக்கு, மருத்துவரும் இந்த ஆடியோ பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மூச்சு திணறலின்போது ஜெயலலிதா பேசியது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ரத்த அழுத்தம் 140/80 இருக்கிறது என்று மருத்துவர் கூறுகிறார். அது எனக்கு இயல்பு தான் என்று ஜெயலலிதா கூறுகிறார்.