வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (13:58 IST)

“அரசியல் பொம்மலாட்டத்தில் மக்கள் பொம்மைகளா?''

தூத்துக்குடியில் இருந்து கவனத்தை திசை திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டது என்ற திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினின் கருத்து ஏற்புடையதா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

 
 
இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே..
 
"ஜெயலலிதா ஆடியோ வெளியீடு, இப்போது இருக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் இது ஆளும் கட்சியின் அரசியல் தந்திரம். கிட்டத்தட்ட 72 நாட்கள் ஜெயலலிதா என்ன நிலைமையில் இருந்தார் என்பதை அப்போது மக்களுக்கு தெளிவுபடுத்த ஆளில்லை… இப்போது ஆடியோ வெளியிடுவதும் ..வீடியோ வெளியிடுவதும் மக்களை திசை திருப்புவதற்கன்றி எதற்கோ??? என்கிறார் தேவா அன்பு
 
"அரசுக்கு தெரியும் மக்களை எப்படி திசை திருப்புவது என்று. ஆனால், அரசின் தந்திரத்திற்கு பலியாகாமல் ஆலையை விரட்டுவதில் மக்கள் குறியாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.
 
இதுகுறித்து சக்தி சரவணன் கூறுகையில், "இந்த ஆடியோ வெளியிட்டது, மக்களைத் திசை திருப்புவதற்காகதான் இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே உரிமையை மீட்க இயலும், இல்லை என்றால் அரசியல் பொம்மலாட்டத்தில் பொம்மைகளாக மக்கள் இயங்க வேண்டியிருக்கும்" என்கிறார்
 
"மறதி தான் இந்தியாவின் தேசிய வியாதி. மக்களை சிந்திக்க விட்டால் தங்கள் பிழைப்பு அவ்வளவுதான் என தமிழக கட்சிகளுக்கு தெரியும். அதனால், முடிந்தவரை மக்களை எப்போதும் பரபரப்பாக வைத்து இருக்கிறார்கள்" என்கிறார் முத்துசெல்வம்
 
"திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் ட்விட்டர் நேயர் வேல்முருகன்.
 
"இத்தனை நாளாய் மக்கள் தேடிய போது வெளி விடாத ஆடியோவை இன்று வெளியிடுவது தொடர்ந்து மக்கள் பேசுவதை திசை திருப்பவே" என்கிறார் பிறை கண்ணன்.