வெள்ளி, 6 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (07:40 IST)

இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

School Leave
தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக முழு ஆண்டு தேர்வு நடைபெற்றது என்பதை பார்த்து வந்தோம்.

இந்த நிலையில் நேற்றுடன் முழு ஆண்டு தேர்வு முடிவடைந்ததால் தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அதாவது ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் ஜூன் ஒன்று அல்லது இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் இன்றும் இந்த ஆண்டும் அதேபோல் திறக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva