திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஜனவரி 2021 (15:45 IST)

காத்து வாங்கும் தடுப்பூசி மையங்கள்!? – ஆர்வம் காட்டாத முன்கள பணியாளர்கள்!

தமிழகம் முழுவதும் நேற்று முதலாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் முன்கள பணியாளர்கள் பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் அவசர கால தடுப்பூசியாக கோவாக்சின் மற்றும் கோவுஷீல்டை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் ஆரம்ப கட்டமாக முன்கள பணியாளர்கள்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பல முன்கள் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாததாக தெரிய வந்துள்ளது. கரூரில் நேற்று 400 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டிருந்த நிலையில் 105 பேர் மட்டுமே தடுப்பூசி போட முன் வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் வரை ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள வரவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் இவ்வாறாக எதிர்பார்ப்புக்கு குறைவான ஆட்களே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.