1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (12:19 IST)

ரஜினிக்கு சட்டரீதியிலான ஆதரவு தர தயார்: சுப்பிரமணியன் சுவாமி!

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது அவரது பரம எதிரியை கூட நண்பராக்கிக் உள்ள அதிசயம் நடந்துள்ளது
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசியதாகவும் இதனை அடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பெரியார் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர் இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த ரஜினிகாந்த், தான் உண்மையைத்தான் கூறியதாகவும் நடந்த சம்பவத்தை தான் கூறியதாகவும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார் 
 
இந்த நிலையில் ரஜினியின் இந்த பேட்டிக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறி பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து ரஜினியின் பரம எதிரி என்று கருதப்பட்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி அவர்கள் இந்த விஷயத்தில்தான் ரஜினியை ஆதரிக்க தயார் என்றும் அவர் விரும்பினால் இது குறித்து நீதிமன்றத்தில் அவருக்காக வாதாடவும் தயார் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் 1971 ஆம் ஆண்டில் நடந்த ஊர்வலத்தில் ராமர் மற்றும் சீதையை கேவலமாக சித்தரித்து அணிவகுத்து சென்றது உண்மைதான் என்றும் இந்த உண்மையை கூறிய ரஜினிகாந்துக்கு தான் ஆதரவு அளிக்க இருப்பதாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்