திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (22:34 IST)

ரஜினிக்கு யாரும் ஓட்டு போடலைன்னா எங்களுக்கு நல்லதுதான்: ரஜினி ரசிகரின் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த வருட இறுதியில் தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கூட்டணிகளை எதிர்த்து ரஜினியை ஆட்சியைப் பிடிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் கண்டிப்பாக இரண்டு திராவிட கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் அவர்களை வாக்குகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் ரஜினி இன்னும் 2 படங்கள் மட்டுமே நடிப்பார் என்று கூறப்படும் நிலையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் தனது டுவிட்டரில் இவ்வாறு தெரிவித்துள்ளார்
 
ரஜினிக்கு மக்கள் ஓட்டு போட்டு அவரை முதல்வராக்கினால் நாட்டுக்கு நல்லது, ஒருவேளை அவருக்கு யாரும் ஓட்டுப் போடாமல் அவரும் அவரது கட்சியும் தோல்வியடைந்தால் ரசிகர்களாகிய எங்களுக்கு நல்லது. இன்னும் அவர் பல படங்களில் தொடர்ந்து நடிப்பார் என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அவரது ரசிகர்களுக்கு வெற்றியாகவே கருதப்படுகிறது