திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (19:26 IST)

அனில் அம்பானி ராகுலுக்கு கடிதம்: ரபேல் விவகாரத்திற்கு விளக்கம்

ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பின்னர் அந்த ஒப்பந்தத்தை மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தத்தை பாஜக அரசு மேற்கொண்டது. இந்த புதிய ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. 
 
மேலும், ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் பிரான்ஸ் நிறுவனமான டஸ்சால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார். 
 
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கும் வலையில் அனில் அம்பானி ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ராகுல் காந்தி, என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது. 
 
ரபேல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது. காங்கிரஸ் கட்சிக்கு, தவறான தகவல்களை அளித்து, தவறாக இயக்கி, தவறான பாதையில் அதனை அழைத்து செல்கிறார்கள். 
 
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், இந்திய பாதுகாப்புத்துறைக்கும் இடையே ரபேல் விமான தயாரிப்பு தொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவதை காங்கிரச் கட்சி நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
 
ரபேல் விமான ஊழல் தொடர்பாக தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவதை காங்கிரஸ் கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும் என அனில் அம்பானி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.