ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (18:24 IST)

'கோலமாவு கோகிலா' படத்தை பார்த்து வியந்துபோன ஷங்கர்!

நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.  
இந்நிலையில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார். இந்த படம் குறித்து தனது கருத்தை  டுவிட்டரில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், சுவாரசியமான கிரைம் டிராமாவை பார்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ள நான், நயன்தாராவின் அமைதியான  கம்பீரமான நடிப்பை பார்த்து வியந்து போனேன். 
 
இயங்குநர் நெல்சன், தனது முதல் படத்திலேயே என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் நடித்து அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அனிருத்தின் இசை துப்பாக்கி போன்று சரியான இடங்களில் பாய்ந்து படத்துக்கு வலு சேர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.