செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (11:56 IST)

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜகவின் பலே திட்டம்?

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவில் முதல்வர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்தராமையா தற்போது கட்சி தலைமையின் மீது அதிருப்தியில் உள்ளார். இதனால் சித்தராமையாவுக்கு வரும் 2022ஆம் ஆண்டு துணை ஜனாதிபதி பதவி கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு பதிலாக சித்தராமையாவின் 17 ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
17 காங்கிரஸ் எம்,எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டால் குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்துவிடுவது மட்டுமின்றி தானாகவே பாஜக ஆட்சி அமைக்க தேவையான பலத்தையும் பெற்றுவிடும்
 
கர்நாடக அரசியல் வட்டாரத்தில் இப்படி ஒரு வதந்தி பரவி வந்தாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் முதல்வர் குமாரசாமி தனது முழு ஐந்தாண்டு கால ஆட்சியை முடிக்க மாட்டார் என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.