புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (10:33 IST)

எல்லாரும் ஒரே குட்டையில விழுந்த மட்டைங்க தான்... சு.சுவாமி அடுத்த சர்ச்சை!!

பிராமணர், சூத்திரர், எஸ்டி, என யாரெல்லாம் சொல்கிறார்களோ, அவர்கள் எல்லோரின் டிஎன்ஏவும் ஒன்று தான் என சு.சுவாமி பேசியுள்ளார். 
 
பாஜ்க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை போர போக்கில் பேசிவிட்டு செல்பவர். இப்போது அந்த வகையில் இந்தியர்களின் டிஎன்ஏ குறித்து பேசியுள்ளார்.  தமிழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது, 
 
டிஎன்ஏ தொடர்பாக, வரலாற்றில் ஆங்கிலேயர்கள் கூறியுள்ள தகவல்கள் தவறானது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது, டிஎன்ஏ குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன விஞ்ஞான ஆய்வில், இந்தியர்கள் அனைவரின் டிஎன்ஏவும் ஒன்று தான் என தெரிய வந்துள்ளது.
 
அதாவது, ஜம்மு -காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் அஸ்ஸாம் வரை உள்ள இந்தியர்கள் அனைவரின் டிஎன்ஏவும் ஒன்று தான். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் பிராமணர், சூத்திரர், எஸ்டி என யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லோரின் டிஎன்ஏவும் ஒன்று தான் என்று அறிவியல் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன என்று பேசியுள்ளார்.