வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2023 (13:09 IST)

பைக்கில் வானவேடிக்கை கட்டி ஸ்டண்ட்! – வைரலாகும் வீடியோவுக்கு குவியும் கண்டனங்கள்!

Diwali Stunt
தீபாவளி அன்று ஆபத்தான முறையில் பைக்கில் வானவேடிக்கை கட்டி வெடிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.



நேற்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். சிலர் பட்டாசுகளை ஆபத்தான முறையில் கையாள்வதால் விபத்துகள் ஏற்படுவதும் ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆபத்தான முறையில் மேலும் சில பட்டாசு சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபமாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பைக்கின் முன்பகுதியில் வானவேடிக்கையை கட்டி பற்ற வைத்து விட்டு, பைக்கை வீலிங் செய்தபடியே செல்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள பலர் இதுபோல ஆபத்தான செயல்களை பார்த்து ஈர்க்கப்பட்டு இதை மற்றவர்களும் செய்ய முயன்றால் அசம்பாவிதம் ஏற்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் எங்கே நடந்து என்பது சரியாக தெரியாத நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K