1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (12:16 IST)

சென்னையில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்

சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். 

 
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் ஆகி தற்போது அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதனைத்தொடர்ந்து சென்னையில் மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் ஒன்று வந்துள்ளது. 
 
ஆம், சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். பாலியல் புகார் தொடர்பாக, குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர், பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் கடிதம் எழுதினர். எனவே, அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.