1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (08:58 IST)

தி.கவுடனான தொடர்பை முடித்துக் கொள்ளுங்கள்! – திமுகவுக்கு எச்.ராஜா எச்சரிக்கை!

திராவிட கழகத்துடனான தொடர்பை முறித்துக் கொள்ளாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுகவுக்கு எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் குறித்து ரஜினி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர்மீது திராவிட கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ”ரஜினிகாந்த் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. அன்று நடந்ததைதான் பேசியுள்ளார். அவர் மீது வழக்கு தொடுத்தால் கடவுளர்களை கேவலப்படுத்திய தி.கவின் கி.வீரமணிதான் சிறைக்கு செல்ல வேண்டியதிருக்கும், திகவுடனான தொடர்புகளை திமுக முறித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என கூறியுள்ளார்.