வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (21:36 IST)

விரும்பினால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் விரும்பினால் பொதுத் தேர்வை எழுதலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து மாணவர்களும் பாஸ் மற்றும் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் 35 மதிப்பெண்களுக்கு மேல் தங்களுக்கு வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் மட்டும் மாநில அளவில் நடத்தப்படும் பொது தேர்வு எழுதி அதில் கிடைக்கும் மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம்
 
ஆனால் அதே நேரத்தில் அனைத்து மாணவர்களும் இந்த தேர்வை எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதிக மதிப்பெண்கள் தேவை என்ற மாணவர்கள் மட்டும் இந்த தேர்வை எழுதலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து பல மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத தயாராகி வருவதாக கூறப்படுகிறது,