ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (16:50 IST)

பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் குறித்து புகாரளிக்கலாம்- போக்குவரத்துத்துறை

Town bus
பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் குறித்து ஓட்டுனர், நடத்துனர் புகாரளிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் காலை மற்றும் மாலையில் செல்லும்போது, பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

அவர்களில் சிலர் ஆபத்தான முறையில், பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்வதால் விபத்து ஏற்படுகிறது.

இதன் விபரீதத்தை உணர்ந்து  ஓட்டுனரும், நடத்துனரும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினாலும், சிலர் இதை கேட்பதில்லை.

இந்த நிலையில், மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் நிலை தொடர்வதால் இனி ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என்றும், அப்படி பயணிக்கும் மாணவர்களுக்குப் பேருந்தை நிறுத்தி அறுவுரை வழங்க போக்குவரத்துத்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும், பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் குறித்து ஓட்டுனர், நடத்துனர் புகாரளிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.