திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:07 IST)

கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமையும் வகுப்பு: கல்வி இயக்குனர் உத்தரவு

college students
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள், மாணவிகளுக்கு மட்டும் சனிக்கிழமையும் வகுப்பு நடத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
2022 - 2023 ஆம் ஆண்டின் கல்வி ஆண்டில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தாமதமானதால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் கட்டாயம் வகுப்பு நடத்தப்பட வேண்டும் என கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
2023 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை நடத்தி முடித்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமை வகுப்பு உண்டு என்ற அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran