1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 6 ஜனவரி 2020 (20:09 IST)

சென்னையில் ஓடும் பேருந்தில் கூரை மீது ஏறிய மாணவர்கள் !

சென்னையில் ஓடும் பேருந்தி மீது மாணவர்கள் ஏறிப் பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மந்தைவெளியில் இருந்து பிராட்வே செல்லும் பேருந்தில் ஏறிய நியூ காலேஜை சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
 
அப்போது, ஒரு மாணவன் ஓடும் பேருந்தில் ஜன்னலில் கால் வைத்து கூரை மீது ஏற முயற்சி செய்தான். அவனுடன் இன்னொரு மாணவனும் அதேபோன்று செயல்களைச் செய்தான்.
 
மக்கள் அவர்களை கீழே இறங்கும்படி கூறியும் அவர்கள் கேட்கவில்லை.  பின்னர், அண்ணாசாலை பெரியார் சிலை அருகே பேருந்து வந்ததும், போலீஸாரின் உதவியுடன் இரு இளைஞர்களையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.