1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate hits its maximum of Rs.31,168

ஒரே ஜம்பு.... 31 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை!!

Gold Price
இதுவரை இல்லாத உச்சத்திற்கு உயர்ந்து தங்கத்தின் விலை மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.   
 
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றமும் இறக்கமுமாய் ஆட்டம் காட்டி வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையாலும், பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதாலும் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.    
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ரூ.30,000-த்திற்குள் இருந்த நிலையில் தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.64 உயர்ந்து ரூ.3,896க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் தங்கத்தின் விலை ரூ.1,280 உயர்ந்துள்ளது. 
 
ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதன் விலைவாக கச்சா எண்ணெய் விலை உயந்துள்ளதை அடுத்து இந்த தாக்குதல் தற்போது தங்கத்தின் விலையிலும் எதிரொலித்துள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
என்னடா இது அமித்ஷாவுக்கு வந்த சோதன... டிரெண்டாகும் #ResignAmitShah!!