புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (19:17 IST)

சென்னை அருகே ஆசிரியரை கிரிக்கெட் மட்டையால் கொடூரமாக தாக்கிய மாணவர்கள்!

சென்னை: பெண்களை  கேலி செய்ததை தட்டிக்கேட்ட ஆசிரியரை, முன்னாள் மாணவர்கள் ஹாக்கி ஸ்டிக் மற்றும் கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
திருவள்ளூர் மாவட்டம்  ஆவடி அருகே அன்னனூரில் வசிப்பவர் பரமானந்தம்.இவர் கடம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு கடந்த சனிக்கிழமை நடந்து சென்றுள்ளார்.  அப்போது அந்த வழியாக வந்த 4 இளைஞர்கள் ஆசிரியரை வழிமறித்து தாக்கினர். கிரிக்கெட் பேட் மற்றும் ஹாக்கி மட்டையால் ஆசிரியரை இளைஞர்கள் கடுமையாக தாக்கினர். அவர்கள் ஆசிரியரை தாக்கும் போது முகத்தில் கர்சிப் கட்டியிருந்தனர். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஆசிரியர் பரமானந்தம் படுகாயம் அடைந்தார். அவரை ரயில்வே பயணிகள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
 இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், நான்கு இளைஞர்களையும் கைது செய்தனர். 
 
கைது செய்யப்பட்ட கோடீஸ்வரன் (21), சுபாஷ் (21),  மோகன்ராஜ்(19), ஆகாஷ் (19) ஆகிய 4 பேரும்  பரமானந்தம் ஆசிரியராக உள்ள பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது தெரியவந்தது.  பரமானந்தம் அங்கு வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவிகளை கேலி செய்ததை ஆசிரியர் தட்டிக் கேட்டுள்ளார்.
 
இதனால் அவரை பழிவாங்க முடிவு செய்த இளைஞர்கள் ரயில் நிலையத்தில் மறித்து கடுமையாக தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் கைது செய்யப்ட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.