புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (14:49 IST)

என்ன ஆச்சு கேப்டனுக்கு? 10 மணிநேரம் விமான நிலையத்தில் இருந்தது ஏன்?

வெளிநாட்டில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பிய கேப்டன் விஜயகாந்த் 10 மணிநேரத்திற்கும் மேலாக சென்னை விமான நிலையத்தில் இருந்துள்ளார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நிலையில் அவர் சிகிச்சை முடிந்து பூரண குணமாகிவிட்டதால் பிப்ரவரி 16ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் இன்று அதிகாலை  சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயகாந்த் வந்தடைந்தத விஜயகாந்த் சற்று முன்னர் தான் வீடு திரும்பினார். கிட்டதட்ட 10 மணி நேரத்திற்கும் மேல் அவர் விமான நிலையத்தில் உள்ள ஓய்வு அறையிலேயே தங்கி இருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மியாட் மருத்துவமனையில் இருந்து மருத்துவக்குழு ஏர்போர்ட்டிற்கு விரைந்தனர்.
 
இதுகுறித்து கேப்டனின் மனைவி பிரேமலதா கூறுகையில், கேப்டன் கிட்டதட்ட 25 மணி நேரம் பயணம் செய்திருக்கிறார். அதனால் அவர் சற்று களைப்புடன் இருந்தார். அதனால் தான் அவர், சற்று ஓய்வெடுத்து சாப்பிட்டுவிட்டு கிளம்புகிறார் என கூறினார். மேலும் பெரிய கட்சிகள் அனைத்தும் தங்களிடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.