வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 21 பிப்ரவரி 2019 (12:58 IST)

கார் ரேஸில் ஈடுபட்ட மாணவிகள்...மாணவர் கவலைக்கிடம்...

கோவை அவிநாசி சாலையில் இன்று காலைவேளையில் மாணவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில்  சாலையின் இடது புறமாக வந்த போது, கல்லூரி மாணவிகள்  அதிவேகத்தில் ஓட்டி வந்த கார்  அந்த மாணவர் மீது மோதியது. இதில் அம்மாணவர் அடித்த வேகத்தில் தூக்கி வீசப்பட்டு சாலையிலேயே மயங்கி விழுந்தார். இந்த சம்பவத்தால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலையில் கோவை அவிநாசி சாலையில் பாலாஜி என்ற மாணவர் தன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் போது, கார் ரேஸில் ஈடுபட்ட மாணவிகள் சிலர் இரு சொகுசு கார்களில் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் மோதியதில் மாணவர் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த பாலாஜி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவர் தலைக்கு ஹெல்மெட் அணிந்ததனால்தான் உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விபத்து நேரும் காட்சிகள் எல்லாம் அங்கே சாலையில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
 
கார் ரேஸில் ஈடுபட்ட மாணவிகள் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் அம்மாணவிகளை தேடி வருவதாக தகவல் வெளியாகின்றன