திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:48 IST)

ஆசிரியரை அடிக்க கையை ஓங்கிய பள்ளி மாணவன் சஸ்பெண்ட்!

teacher student
ஆசிரியரை அடிக்க கையை ஓங்கிய பள்ளி மாணவன் சஸ்பெண்ட்!
ஆசிரியரை அடிக்க கையை ஓங்கிய மாணவன் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பில் தூங்கிய மாணவனை கண்டித்தார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் ஆசிரியரை அடிக்க கையை ஓங்கிய தெரிகிறது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் ஆசிரியரை அடிக்க மாணவன் கை ஓங்கியது உறுதியான நிலையில் அந்த மாணவன் சஸ்பெண்ட் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன