வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:45 IST)

ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

teachers
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு படித்துள்ளவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில்  தேர்ச்சி பெற்றால்தான் அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறியது, அதன்படி தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனவே, ஏப்ரல்  18 முதல் ஏப்ரல்  26 வரை  விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.