வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : சனி, 13 ஜூலை 2024 (15:53 IST)

பள்ளி மாணவர் தலைவர்கள் பதவி ஏற்பு விழா!

சுகுணா மோட்டார்ஸ் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணசாமி,சாந்தினி அனீஷ் குமார் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்..
 
பதவி ஏற்பு விழாவில்,பள்ளி இயக்குனரும் முதல்வருமான ஆண்டனி ராஜ்,தலைமையாசிரியர் லீனா,நிர்வாக அலுவலர் உமாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இதில், மாணவர் தலைவர் மாணவிகளுக்கான தலைவி, விளையாட்டு செயலாளர்,கலை மற்றும் கலாச்சார செயலாளர்,ஹவுஸ் கேப்டன்,துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்கள் பதவிகளை ஏற்று கொண்டனர்..
 
குறிப்பாக மாணவர்களின் பல்வேறு வகையான திறமைகளை வளர்க்கக் கூடிய பள்ளியின் கனாப்பஸ், பொலாரிஸ்,ரெகுலஸ் மற்றும் சைரஸ் ஆகிய கிளப் தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள்  பதக்கங்களையும், கொடிகளையும் வழங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்து பேசினர்.
 
அப்போது பேசுகையில்,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கென வழங்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்..