1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. rajinikanth visit delhi to meet pm modi?

திடீரென டெல்லி சென்றுள்ளார் ரஜினிகாந்த்.. மோடியுடன் சந்திப்பா?

பிரதமர் மோடி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து அவர் நேராக டெல்லி சென்றிருப்பதாகவும் அவர் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் 293 தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உறுதி உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிரதமர் மோடி அமைச்சரவையை கலைக்க உத்தரவிட்டதாகவும் அதன் பின்னர் மீண்டும் குடியரசு தலைவரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் வரும் எட்டாம் தேதி பிரதமர் மோடி பதவியேற்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்த் டெல்லி சென்று இருப்பதாகவும் அவர் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு பேரணி!