ஆற்றில் மூழ்கி மாணவர் பலி


Abimukatheesh| Last Modified வெள்ளி, 22 ஜூலை 2016 (09:00 IST)
மொடக்குறிச்சி அருகே காவிரி அற்றில் குளிக்கும்போது பள்ளி மாணவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

 

 
அரச்சலூர் அருகே கஸ்தூரிபா கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ(18), மொடக்குறிச்சியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தார்.
 
இந்நிலையில், நேற்று அவர் விடுப்பு எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி இளங்கோ உயிரிழந்தார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மீனவர்கள் உதவியுடன் இளங்கோவின் உடலை மீட்டனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :