1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Commercial LPG Cylinder Prices Hiked by Rs 993; Domestic Rates Remain Unchanged Amid Middle East Conflict

ஒரு சிலிண்டருக்கு ரூ.968 உயர்வு.. வணிக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.3237..! வீட்டு சிலிண்டர் விலை என்ன?

cylinder
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை இன்று முதல் 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம் டெல்லியில் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை 3071.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.968 உய்ரந்து ரூ.3237க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
பிப்ரவரி 28 முதல் தொடங்கிய போர் சூழலுக்கு பிறகு வணிக சிலிண்டர் விலை உயர்வது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக மார்ச் மாதத்தில் 144 ரூபாயும், ஏப்ரல் 1-ஆம் தேதி 195.50 ரூபாயும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இருப்பினும், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. 
 
அதேபோல், பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் எவ்வித மாற்றமும் இல்லை என அரசு தெரிவித்துள்ளது. விமான எரிபொருள் விலையிலும் மாற்றம் ஏதுமில்லை என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. 
 
இதற்கிடையில், ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மற்றும் விமான எரிபொருளுக்கான கலால் வரியை அரசு முறையே 23 ரூபாய் மற்றும் 33 ரூபாயாகக் குறைத்துள்ளது. இந்த தொடர் விலை உயர்வு உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களை பாதித்துள்ள நிலையில், நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
யூடியூப் கிரியேட்டர்களும் இனி வருமான வரி கட்ட வேண்டும்: மத்திய அரசின் புதிய மசோதா..!