1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (19:41 IST)

மதிப்பெண் குறைவு பயத்தால் மாணவர் தற்கொலை!

சென்னையைச் சேர்ந்த மாணவர் பத்தாம் வகுப்பு தேர்வில் சரியாக மதிப்பெண் வராது என்ற பயத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையிலுள்ள நடராஜ் தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சதீஸ் ஒரு தனியார் பள்ளியில்  10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதினார்.

ஆனால், அத்தேர்வில் அவர் சரியாக எழுதவில்லை எந்றும், அதனால் தனக்கு குறைவான மதிபெண்களே கிடைக்கும் என வருத்தமுடன் தன் நண்பர்களிடம் சதீஸ் கூறிவந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலைட்யில் மனமுடைந்த சதீஸ் தன் வீட்டிலுள்ளா அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர்  நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சதீஸின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகு மனுப்பி வைத்தனர்.