1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Platform Screen Doors Installed on Poonamallee-Porur Stretch to Enhance Passenger Safety

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடைமேடை தடுப்பு கதவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
 
பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான 10 கி.மீ தொலைவு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் உள்ள 10 ரயில் நிலையங்களிலும், பயணிகள் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் விழுவதை தவிர்க்கும் வகையில் ஆள் உயரத் தடுப்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
 
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்துள்ளன.
 
திட்டமிடப்பட்டபடி, பிப்ரவரி மாத இறுதிக்குள் பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவையை தொடங்க நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 
 
போரூர் - வடபழனி இடையே நிலைய பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இரண்டாம் கட்ட மெட்ரோவின் இந்த முதல் வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னையின் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran