திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (21:24 IST)

'கேம் 'விளையாடியதை கண்டித்ததால் மாணவன் தற்கொலை

சென்னையில் செல்போனில்  கேம் விளையாடியதை தாம் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்   தனசேகர். இவர்து மகன் மற்றும் மன்னைவியுடன் அங்கு பவசித்து வருகிறார்.

மகன் சுரேஷ் அரசுப்பள்ளியில் படித்து வரும் நிலையில் அவருக்கு தறோது திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. ஆனால் தேர்வுக்குப் படிக்காமல்  செல்போனில் ஃபீ பயர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்தா அவரது தாய் அவரைக் கண்டித்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த மாணவன் அறைக்கதவை தாழிட்டுக் கொண்டு  நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர்  வந்து கதவை உடைத்தபோது, மாணவன் புடவையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.