திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (07:55 IST)

ஏழுமலையான் கோவிலில் கூடுதல் இலவச டிக்கெட்டுக்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு

ஏழுமலையான் கோவிலில் தினசரி 10 ஆயிரம் டிக்கெட்டுகள் கூடுதலாக இலவச தரிசனத்திற்கு வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் திருப்பதி கோவிலிலும் இந்த தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதலாக மேலும் 10 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் இந்த இலவச டிக்கெட்டுகளை திருப்பதியில் உள்ள மூன்று இடங்களில் வினியோகம் செய்யப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
இது குறித்த முழு விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளங்களில் பார்த்து பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.