தொடர்புடைய செய்திகள்
- கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!
- காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!
- 8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!
- 9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!
- சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!
நடு ரோட்டில் காதலனை கம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!
சென்னை, கே.கே. நகர், நெசப்பாக்கத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்த இவர்களின் உறவில், இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த இளைஞர் மாணவியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த இளம் பெண், தற்செயலாக கே.கே. நகர் பகுதியில் காதலன் தனது தாயுடன் நடந்து செல்வதைக் கண்டார். உடனே அவரை வழிமறித்து, "ஏன் என்னிடம் பேசுவதில்லை?" என்று கேட்டு, தான் வைத்திருந்த கம்பால் இளைஞரைத் தாக்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் ஓட, மாணவியும் அவரை துரத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்தவர்களும், இளைஞரின் தாயும் மாணவியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
