செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:42 IST)

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு: கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு!

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கருத்து கேட்பு கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது 
 
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா என சற்றுமுன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டக்குழுவினர் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர் 
 
இந்த கூட்டத்தில் பொதுமக்களில் சிலர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று கூறினாலும் போராட்டக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர் 
 
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அந்த பகுதி மக்கள் தற்போது தான் நிம்மதியாக உள்ளனர் என்றும் எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் போராட்டக்குழுவினர் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது