ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (14:04 IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு: பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
வங்க கடலில் தோன்றி உள்ள காற்றழுத்த தாழ்வு மையம் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக காற்றழுத்த தாழ்வு மையமாக மாறியது. சென்னை மற்றும் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதும் தற்போது 250 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு குறியீடாக ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது 
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில மணி நேரத்திற்கு மேலும் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது