புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (16:41 IST)

கடைக்கு முன்பு நின்ற டூவீலர் வாகனத்தை திருடிய இளைஞர் !

திருப்பூர் மாவட்டத்தில் சாலையோரமாக கடைக்கு முன் நிறுத்திய இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞனை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் குமரன்  ரோட்டில் ஜெராக்ஸ் கடையை நடத்தி வருபவர் மணிமாறன். இவர் எப்பவும் தனது கடைக்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.
 
இந்நிலையில் இன்று வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தை ஜெராக்ஸ் கடைக்கு முன்பு நிறுத்தி சாவியை அதிலேயே வைத்துவிட்டு கடைக்குள் சென்றுள்ளார்.
 
பின்னர் அந்தவழியே வந்த இளைஞன் ஒருவர், இருசக்கர வாகனத்துடன் சாவி இருப்பதை பார்த்து அதை திருடிச் சென்றுவிட்டான்.
 
இந்தக் காட்சிகள் எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. பின்னர் தனது வண்டியை காணவில்லை என பதறிய மணிமாறன் போலீசாரிடம் புகார் அளித்தார். வாகனத்தை திருடிய இளைஞனை போலீஸார் தேடி வருகின்றனர்.