புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (13:26 IST)

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 24 மணிநேரமும் முகவர்கள் - தேர்தல் அதிகாரி

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என்று தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி  நுழைந்தது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மதுரை சம்பவம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பான அறிக்கையை கூடுதல் தலைமை அதிகாரி நாளை சமர்பிப்பார் என்று தெரிவித்தார். 
 
மேலும் ஆவணத்தை நகல் எடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடமும் பாலாஜி விசாரணை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் இரவு 10 மணிக்கு மேலும் வேட்பாளர்களில் முகவர்கள் இருக்கலாம் என்றும், வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர் இருக்கலாம் என்று  தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.