செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (12:25 IST)

ஆக்சிசன் உற்பத்தி : 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பு மையத்தை மட்டும் அவசர நிலை கருதி திறக்க வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
 
இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தற்போது உள்ள அவசர நிலையில் ஆக்ஸிஜன் தேவை என்பதால் அரசே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்தப்பட்டது.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ஆக்சிசன் உற்பத்தி மேற்கொள்ள 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழ அரசு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.