1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (12:40 IST)

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும்: அமைச்சரின் சர்ச்சைக் கருத்து

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 
 
இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் ஆலையை திறந்துகொள்ளலாம் என சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனால் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், ஸ்டெர்லைட் ஆலை திடீரென மூடப்பட்டதால் 1 லட்சம் பேர் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். மீண்டும் ஆலையை திறக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் துயரங்கள் நீங்க ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என அமைச்சர் கூறினார். அமைச்சரின் இந்த கருத்து தூத்துக்குடி மக்களை கடும் கொந்தளிப்படைய வைத்துள்ளது.