செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (14:07 IST)

கோடநாடு விவகாரம்: நெருப்பில் இறங்கவும் தயார்: எடப்பாடியாரை கோர்த்துவிட்ட ராஜேந்திர பாலாஜி

கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றமற்றவர் என நிரூபிக்க அவர் நெருப்பில் இறங்கவும் தயார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ ஒரு திட்டமிட்ட சதி என்றும், இந்த வீடியோ வெளியிட்டவர் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்
இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கோடநாடு விவகாரத்தில் திமுக தான் பின்புலமாக இருக்கிறார்கள். ஸ்டாலின் இதை வைத்து கேவலமான அரசியல் செய்கிறார். கோடநாடு விவகாரத்தில் எடப்பாடியார் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க அவர் நெருப்பில் இறங்க கூட தயார். ஆகவே திமுக இதுபோல் வீண் வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டுமென அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.